ராஜநிலை அதிர்ஸ்ட அளவுக்கலை பற்றி

ராஜநிலை அதிர்ஸ்ட அளவுக்கலை ஜோதிடம் வித்தியாசமானது இதுவரை யாரும் அறிந்திராத கலை. ராஜநிலை அதிர்ஸ்ட அளவுக்கலை ஜோதிடமானது 20 வருட ஆராய்ச்சியின் பலனாய் உருவானது.

பொதுவாக எண் கணிதமுறை என்பது எல்லோரும் கணித்து, பலன் சொல்வது 0 முதல் 9க்குள் உள்ள எண்களை வைத்து தான். ராஜநிலை அதிர்ஸ்ட அளவுக்கலை ஜோதிடம் 0 முதல் 99 வரை 100 எங்களுக்கும் துல்லியமாக பலன் சொல்லும் முறை.

அதே போல் எண் கணிதத்தில் பிறந்த தேதி, பிறந்த மாதம், பிறந்த வருடம் ஆகியவற்றை கூட்டாக எடுத்து ஒரு பலனும், பிறந்த தேதிக்கு ஒரு பலனுமே சொல்லப்பட்டு வருகின்றது.

ராஜநிலை அதிர்ஸ்ட அளவுக்கலை ஜோதிடத்தில் இதை இன்னும் பகுத்து பலன் சொல்லலாம்.

ஒருவருடைய பிறந்த தேதி, மாதம், வருடம் இவற்றை வைத்து பலன் சொல்லலாம் !!

ஓருவருடைய வாகன எண்களை வைத்து பலன் சொல்லலாம் !!

ஒரு வீட்டில் உள்ள ராஜநிலையை வைத்து பலன் சொல்லலாம் !!

ஒருவருடைய வியாபார ஸ்தலத்தில் உள்ள கல்லா மேஜையை வைத்து பலன் சொல்லலாம் !!

ராஜநிலை அதிர்ஸ்ட அளவுக்கலை ஆராய்ச்சி ஆசான் திரு.ஆ. ராஜசேகர் அவர்கள்

நமது ராஜ நிலை அதிர்ஷ்ட அளவு கலை ஜோதிடமானது நான் கிட்ட தட்ட 20 வருடம் ஆய்வில் கண்டறியப்பட்டதாகும் எனது தந்தை எனது கடைக்கு பெயர் வைத்து கொடுத்தார் மிக பிரபலமாக வாழ்ந்து வந்தேன் கடை பெயர் மாற்றம் செய்யப்பட்டது பிறகு மிகவும் நஷ்டம் அடைந்தேன் அதன் பிறகு ஊரை விட்டே வெளியேறி பிறரிடம் வேலை செய்யும் நிலையில் இருந்தேன்

அதன் பிறகு நியுமராலாஜியில் சில ஆய்வுகள் செய்து சிறிய வெற்றி பெற்று மேற்கொண்டு ஆய்வுகள் தொடர்ந்து வந்தது மீண்டும் சொந்தமாக தொழில் தொடங்க முடிவு செய்து எனது ஆய்வுகளில் ஒரு எண்ணில் கடை பெயர் அமைத்து வெற்றி பெற்றேன் அதன் பிறகு ஆய்வுகள் தொடர்ந்தது வெற்றி எண்கள் தோல்வி எண்கள் தரம் பிரித்து ஒவ்வொரு எண்ணுக்கும் ஆய்வகள் தொடர்ந்தது வெற்றிகளும் தொடர்ந்தது 15 வருடம் ஆய்வில் வெற்றிகரமாக ராஜ நிலை அதிர்ஷ்ட அளவு கலை ஜோதிடம் பிறந்தது

அடுத்த 5 வருடம் நண்பர்களுக்கு கொடுத்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வெற்றி பெற்று மீண்டும் மீண்டும் ஆய்வு செய்து வெற்றிகரமாக வகுப்பு நடத்த முடிவு செய்து வகுப்பு 16.2.2019 முதல் முறையாக ராஜ நிலை அதிர்ஷ்ட அளவு கலை ஜோதிடம் வகுப்பு ஆரம்பம் அடுத்து அடுத்து வகுப்புகள் நடந்து வருகிறது

கடந்த ஒரு வருடத்தில் (16-02-2019 முதல் 16-02-2020 வரை) 20 வகுப்புகள் நடைபெற்றன. இந்த 20 வகுப்புகளில் கலந்து ராஜ நிலை அதிர்ஷ்ட அளவு கலை ஜோதிடம் கற்றுக் கொண்டது 300க்கும் மேற்பட்ட நண்பர்கள். இவர்களில் தேர்வு எழுதி வெற்றி பெற்ற நண்பர்களை தான் ராஜ நிலை வெப்சைட்டில் இணைத்து உள்ளோம்